Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தமிழ்நாடு மின்மிகை மாநிலமா? - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

தமிழ்நாட்டை மின்மிகை மாநிலம் எனக் கூறுவது தவறானது எனத் தெரிவித்துள்ளார் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
 
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில், பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில் துறைவாரியான நிதி ஒதுக்கீடு என பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
 
மின்சாரத் துறைக்கான அறிவிப்புகள் குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், ''தமிழ்நாட்டை மின்மிகை மாநிலம் எனக் கூறுவது தவறானது. 2,500 மெகாவாட் மின்சாரத்தை மின்சந்தையில் கொள்முதல் செய்தே தமிழ்நாடு அரசு சமாளிக்கிறது. மின் வாரியத்தின் கழக நிறுவனங்கள் நொடிந்து போவதில் இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். விலைப் பட்டியல் இடுதல் மேம்படுத்தப்பட்டு மின்சேமிப்பு ஊக்குவிக்கப்படும்.
 
தற்போது நிறுவப்பட்டுள்ள மின் உற்பத்தி திறனை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் 17,980 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கூடுதலாக சேர்க்கப்படும். வேளாண்மைக்கான இலவச மின்சாரம், வீட்டு மின்சார மானியத்திற்காக ரூ.19,872.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்'' உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்