Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“கிழக்கிந்திய கம்பெனியின் வெர்ஷன் 2.0 தான் அமேசான்” - ஆர்.எஸ்.எஸ்-சின் பஞ்சஜன்யா வார இதழ்

வலது சாரி அமைப்பான ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் கடந்த 1948 முதல் ‘பஞ்சஜன்யா’ என்ற இந்தி மொழி வார இதழை அச்சிட்டு, வெளியிட்டு வருகிறது. இந்த வார இதழில் மின்னணு வணிக நிறுவனமான ‘அமேசான்’ நிறுவனத்தை ‘கிழக்கிந்திய கம்பெனியின் வெர்ஷன் 2.0’ என சொல்லி கவர் ஸ்டோரி ஒன்றை வெளியிட்டுள்ளது. 

image

அமேசான் இந்தியா நிறுவனத்தின் சட்ட பிரதிநிதிகள் லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்த நிலையில் ‘பஞ்சஜன்யா’ பத்திரிகையின் இந்த சாடல் தற்போது சர்ச்சையாகி உள்ளது.

“அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கும் அளவிற்கு என்ன தவறு நடந்தது? உள்நாட்டு மக்கள் இந்த நிறுவனத்தை ஏன் தங்களது தொழில் மற்றும் பொருளாதார சுதந்திரத்திற்கான அச்சுறுத்தலாக கருதுகின்றார்?” என்பது மாதிரியான கேப்ஷனை கொடுத்து சமூக வலைத்தளங்களில் பஞ்சஜன்யா இதழின் ஆசிரியர் ஹிதேஷ் ஷங்கர், இந்த வார இதழின் அட்டைப் படத்தை பகிர்ந்துள்ளார். 

அதோடு உள்ளூர் சுதேசி ஆதரவுக்கான VOCAL FOR LOCAL என்ற முழக்கத்தையும் டேக் செய்துள்ளார் அவர். இந்த மாத தொடக்கத்தில் இன்போசிஸ் குறித்தும் விமர்சித்திருந்தது பஞ்சஜன்யா வார இதழ். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்