ரூ.218.22 கோடியில் 4 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்திருக்கிறார்.
திருச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரையில் 394 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்திருக்கிறார். இந்த 4 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படுவதன்மூலம் சுமார் 7000 பேர் வேலைவாய்ப்பு பெறுவர் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் நீலகிரியில் 10 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் ரூ.50.06 கோடியில் நவீனமயமாக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
“இளைஞர் படை பாஜக பக்கம் திரும்பி இருக்கிறது; கட்சி முன்னோர்களே அதற்கு காரணம்” - அண்ணாமலை
நீட்ஸ் திட்டத்தில் தொழில்முனைவோர் மானியம் ரூ.75 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்