Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

”எஸ்.பி.பி மணிமண்டபம் கட்ட அரசின் உதவியை நாடவிருக்கிறோம்” - மகன் சரண் பேட்டி

”எஸ்.பிபி மணிமண்டபம் கட்ட அரசு உதவ வேண்டும்” என்று பாடகர் சரண் அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.

பின்னணி பாடகர் எஸ்பிபி கடந்த ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள அவரது பண்ணை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.இன்று அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது குடும்பத்தினர் நினைவு நாளை அனுசரித்தனர்.

அப்போது பொது மக்களுக்கு கொரோனாவை காரணம் காட்டி அனுமதி இல்லை என தெரிவித்தனர். இந்த நிலையில், எஸ்பிபி-க்கு நினைவிடத்தில் இசை அஞ்சலி செலுத்தப்பட்டது. பாடகர்கள் முகேஷ், ஆதவன், மீனாட்சி சீனிவாசன் உள்ளிட்டோர் இசை அஞ்சலி செலுத்தினர். குறைந்த அளவில் கூட்டம் இருந்ததால் கொரோனா விதிமுறைகளின்படி பொது மக்கள் அஞ்சலிக்கு அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் முதலமாண்டு நினைவு தினத்தையொட்டி புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த எஸ்பிபி மகன் சரண், “எஸ்.பி.பி மணிமண்டபம் கட்ட அரசின் உதவியை நாடவிருக்கிறோம். யார் வேண்டுமென்றாலும் உதவி செய்யலாம்” என்று கூறியிருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்