Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஐபிஎல் 2021: வாழ்வா சாவா ஆட்டத்தில் மும்பை - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியமானது இரு அணிகளுமே வாழ்வா, சாவா என்ற போராட்ட நிலையில் இன்றைய போட்டியை சந்திக்கின்றன.
 
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 3 அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. ஐதராபாத் சன்ரைசர்ஸ் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. இந்த நிலையில் சார்ஜாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறும் 51-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
 
ரோகித் ஷர்மா தலைமையிலான நடப்பு சாம்பியன் மும்பை அணி 12 ஆட்டங்களில் விளையாடி, 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று ஏழாவது இடத்தில் இருக்கிறது. அந்த அணி தனது எஞ்சிய 2 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று ரன்ரேட்டிலும் வலுவாக இருந்தால்தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற சூழலில் இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் தோற்றால் மும்பை அணி லீக் சுற்றுடன் வெளியேற வேண்டியதுதான்.
 
image
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தில் உள்ளது. அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்திலும் கடைசி போட்டியிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
 
இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியமானது இரு அணிகளுமே வாழ்வா, சாவா என்ற போராட்ட நிலையில் இன்றைய போட்டியை சந்திக்கின்றன. எனவே இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் இவ்விரு அணிகளும் இதுவரை 23 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் மும்பை 12 ஆட்டத்திலும், ராஜஸ்தான் 11 ஆட்டத்திலும் வென்று இருக்கின்றன. ராஜஸ்தானுக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
 
image
இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-
 
மும்பை இந்தியன்ஸ்: ரோகித் ஷர்மா (கேப்டன்), குயின்டான் டி காக், சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, நாதன் கவுல்டர் நிலே, ஜெயந்த் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, டிரென்ட் பவுல்ட்.
 
ராஜஸ்தான் ராயல்ஸ்: இவின் லீவிஸ், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஷிவம் துபே, கிளென் பிலிப்ஸ், டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, ஆகாஷ்சிங், மயங்க் மார்கண்டே, சேத்தன் சகாரியா, முஸ்தாபிஜூர் ரகுமான்.
 
இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்