Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

2021 ஐபிஎல் சீசனில் இவர்கள் தான் கெத்து! விருதுகளை குவித்த வீரர்கள் விவரம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் 2021 ஐபிஎல் சீசன் நிறைவடைந்துள்ளது. நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்நிலையில் இந்த சீசனில் தங்களது அபாரமான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய வீரர்கள் குறித்து பார்க்கலாம். 

image

ஆரஞ்சு கேப்!

ஒவ்வொரு சீசனின் முடிவிலும் அதிக ரன்களை குவித்த வீரர்களுக்கு ஆரஞ்சு நிற தொப்பியை கொடுத்து அங்கீகரிப்பது வழக்கம். அந்த வகையில் 2021 சீசனில் 16 ஆட்டங்களில் விளையாடி 635 ரன்களை குவித்த சென்னை அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆரஞ்சு கேப்பை வென்றுள்ளார். அதோடு வளர்ந்து வரும் வீரர் என்ற விருதையும் அவர் வென்றுள்ளார். 

image

பர்பிள் கேப்!

அதே போல 2021 சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பவுலர் ஹர்ஷல் பட்டேல் பர்பிள் கேப்பை வென்றுள்ளார். மொத்தம் 32 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பிராவோவின் சாதனையை சமன் செய்துள்ளார் அவர். 

அதே போல Most Valuable Player மற்றும் கேம்சேஞ்சர் ஆஃப் தி சீசன் விருதையும் அவர் வென்றுள்ளார். 

“மிக்க நன்றி. இது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சிகரமான சீசனாகும். தனிப்பட்ட முறையில் எனக்கு இது ரொம்பவே மறக்க முடியாத சீசன். நான் இந்த சீசனில் சிறப்பாக பந்து வீசியது எனக்கு திருப்தி” என விருதை பெற்ற அவர் தெரிவித்துள்ளார். 

image

சிறந்த கேட்ச்!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர் ரவி பிஷோனி 2021 ஐபிஎல் சீசனில் சிறந்த கேட்ச் பிடித்தற்காக விருதை வென்றார். “அந்த கேட்ச்சை என்னால் என்றுமே மறக்க முடியாது. இந்த விருதை வென்றமைக்காக நான் சந்தோஷப்படுகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார். 

ஃபேர் பிளே விருதை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்றுள்ளது. 

image

உதிரிகள்!

சென்னை அணியின் ரவீந்திர ஜடேஜா ஒரே ஓவரில் 36 ரன்களை விளாசி அசத்தியுள்ளார். 64 பவுண்டரிகள் விளாசி தொடரில் அதிக பவுண்டரி விளாசிய முதல் நிலை வீரராக உள்ளார் ருதுராஜ். மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் ஒரே இன்னிங்ஸில் அதிகபட்சமாக 13 பவுண்டரிகளை விளாசி உள்ளார். சீசனில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்களில் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 30 சிக்ஸர்களை பறக்கவிட்டு முதலிடத்தில் உள்ளார். டூ ப்ளசிஸ் 6 அரை சதங்களை இந்த சீசனில் பதிவு செய்துள்ளார். மும்பை அணியின் இஷான் கிஷன் 16 பந்துகளில் அரை சதம் பதிவு செய்துள்ளார். சிறந்த ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரர்களில் டெல்லி அணியின் ஹெட்மயர் முதலிடத்தில் உள்ளார். 

டெல்லி அணியின் பவுலர் ஆவேஷ் கான் 156 டாட் பந்துகளை வீசி உள்ளார். கொல்கத்தா அணியின் வீரர் ஃபெக்யூஸன் 153.63 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசியதே அதிகபட்ச வேகமாகும். ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஒரே பவுலர் ஹர்ஷல் பட்டேல். 

இதையும் படிக்கலாம் : 'கிரிக்'கெத்து 5: 2003 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சச்சினின் பேட் எழுதிய காவியம் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்