Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

யாரும் நிபுணர்கள் அல்ல; குறைகளை பொறுப்போம் - ஊழியருக்கு மீண்டும் பணி வழங்கும் சொமேட்டோ!

நாட்டின் சகிப்பத்தன்மை தற்போது இருப்பதைவிட கூடுதலாக இருக்க வேண்டும். யாரை குறைக்கூறுவது?. அதேபோல அந்த பணியாளரை நாங்கள் மீண்டும் பணியமர்த்துவோம் என்று சொமேட்டோ நிறுவனத்தின் நிறுவனர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல், ''ஒரு உணவு விநியோக நிறுவனத்தின் வாடிக்கையாளர் மையத்திலிருந்து யாரோ அறியாத ஒருவர் செய்த தவறு தேசிய பிரச்னையாக மாறியிருக்கிறது. நாட்டின் சகிப்புத்தன்மை தற்போது இருப்பதைவிட கூடுதலாக இருக்க வேண்டும். யாரை குறைக்கூறுவது?. அதேபோல அந்த பணியாளரை நாங்கள் மீண்டும் பணியமர்த்துவோம். இந்த ஒரு காரணத்திற்காக அவரை பணியிலிருந்து விடுவிப்பது ஏற்புடையதல்ல.

image

இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேறிச் செல்ல அவருக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும். எங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணிபுரிபவர்கள் பெரும்பாலானோர் இளைஞர்கள். இப்போதுதான் அவர்கள் கற்றுக்கொண்டு தனது வேலையை தொடங்கியிருக்கிறார்கள். பிராந்திய மக்களின் உணர்வுகளையும், மொழியின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ளும் அளவிற்கு யாரும் நிபுணர்கள் அல்ல. நானும்தான். நாம் மற்றவருடைய குறைகளை பொறுத்துக்கொள்ள வேண்டும். மற்றவர்களுடைய மொழி மற்றும் பிராந்திய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். தமிழ்நாடு நாங்கள் உங்களை நேசிக்கிறோம். நாட்டை நேசிப்பதைபோல உங்களையும் நேசிக்கிறோம். கூடுதலாகவோ, குறைவாகவோ அல்ல. நாம் வேற்றுமையில் ஒற்றுமையாக இருக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்