Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தீபாவளிக்குப் பின் பள்ளிக்கு வரவிரும்பும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதில்!

நவம்பர் மாதம் முதல் ஒன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்படும் என்றும், விரும்பும் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பள்ளிக்கு வர மாணவர்கள் கட்டாயப்படுத்த மாட்டார்கள் எனவும் கூறினார். மேலும் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “நவ.1 முதல் பள்ளிகள் திறந்து வைக்கப்பட்டிருக்கும். மாணவர்களிடம் ஒழுக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் பள்ளிகள் திறக்கப்படுகிறது. தீபாவளி முடிந்து வர விரும்பும் மாணவர்கள் தாராளமாக வரலாம்" எனக்கூறினார்.

image

முன்னதாக இல்லம் தேடி கல்வி வழங்க 2 லட்சம் தன்னார்வலர்களை எதிர்பார்க்கிறோம் என்றும், நவம்பர் ஒன்றாம் தேதி முதல் மாலை 5 முதல் 7 மணி வரை கற்றல் இடைவெளியை போக்க மாணவர்களை பெற்றோர் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அமைச்சர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.  இந்த இல்லம் தேடி கல்வித் திட்டத்தை அடுத்த வாரம் முதல்வர் தொடங்கி வைக்க இருக்கிறார்.

தொடர்புடைய செய்தி: 'காலாண்டு, அரையாண்டு தேர்வு கிடையாது' - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

அனைத்து வகுப்புகளும் தொடங்கப்படும் போது, சுழற்சி முறையில் வகுப்புகள் எடுத்தாக வேண்டும். வகுப்பறைகளில் மட்டுமின்றி பேருந்துகளில் வரும் போதும் மாணவர்கள் இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்