Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பணமோசடி வழக்கு: மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் கைது

மகாராஷ்டிராவின் முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கை பணமோசடி வழக்கில் அமலாக்கதுறை கைது செய்துள்ளது.
 
தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனில் தேஷ்முக் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சராக இருந்தபோது அங்குள்ள பார் உரிமையாளர்களிடமிருந்து 100 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் பெற்றதாக மும்பை நகர முன்னாள் காவல் ஆணையர் பரம்பீர் சிங் குற்றம்சாட்ட்டியிருந்தார். இதன் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகவில்லை. அமலாக்கத்துறை சம்மன்களை ரத்து செய்யகோரி அவர் தொடர்ந்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்ட நிலையில் அனில் தேஷ்முக் நேற்று காலை சுமார் 11:40 மணியளாவில் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசரணைக்கு ஆஜரானார். பல மணி நேரம் அவரிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. இதன் முடிவில் தேஷ்முக் கைது செய்யப்பட்டார்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்