Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து – பயணம் தொடங்கியது முதல் நடந்தது என்ன?

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், பயணம் தொடங்கியது முதல் நடந்தது என்ன? ஒவ்வொரு நகர்வுகளையும் தெரிந்துகொள்வோம்.

நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் வெலிங்டன் மையத்தில் நடக்க இருந்த கருத்தரங்கில் பங்கேற்க தமிழகம் வந்தார். இதற்காக பிபின் ராவத் உள்பட 14 பேருடன் கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து சரியாக மதியம் 11.47 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டது.

சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டன் மையம் சென்று சேர்வதற்கு 35 நிமிடங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. ஆனால், சூலூரில் இருந்த புறப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் 12.20 மணிக்கு காட்டேரி என்ற பகுதியில் விபத்தில் சிக்கியது. அடுத்த 5 நிமிடத்தில் வெலிங்டன் சென்றுசேர வேண்டிய நிலையில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.

image

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அடுத்த 15 நிமிடங்களில், அதாவது மதியம்12.35 மணியளவில் காவல்துறையினர் விபத்து நிகழ்ந்த இடத்துக்கு சென்றனர். மதியம் 12.40 மணிக்கு 8 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன.

ராணுவ வீரர்கள் 12.45 மணிக்கு விபத்து இடத்துக்கு சென்றடைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்திய விமானப் படை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் மாலை 5.15 மணியளவில் விபத்து நடந்த இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து, ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக இந்திய விமானப்படையின் ட்விட்டர் பக்கத்தில் மாலை 6.03 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனைப்படிக்க...'பிபின் ராவத்தின் மறைவு பேரிழப்பு' - தமிழக தலைவர்கள் இரங்கல் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்