Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: நடந்தது எப்படி? விசாரணைக்கு விமானப்படை உத்தரவு

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது எப்படி? என்பது குறித்த விசாரணைக்கு விமானப்படை உத்தரவிட்டுள்ளது. 

குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது ராணுவ ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்டன் பயிற்சிமையத்திற்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. முக்கிய ராணுவ உயரதிகாரிகள் குறைந்தது 14 பேர் விமானப்படையின் எம்.ஐ வகையைச் சேர்ந்த ஹெலிகாப்டரில் பயணித்ததாகக் கூறப்படுகிறது. இதுவரை 4 பேர் உடல் கருகி இறந்துள்ளதாகவும், 3 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - பிபின் ராவத் நிலை என்ன?

image

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் இந்த ஹெலிகாப்டரில் பயணித்ததால் விபத்து நிகழ்ந்தது எப்படி? யார் யார் பயணித்தனர்? இந்த விபத்துக்கு பின் வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடத்த விமானப்படை உத்தரவிட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்