Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பணம் பண்ண ப்ளான் B -18: கான்ட்ரா ஃபண்ட்களில் முதலீடு செய்வது சரியான தேர்வா?

கான்ட்ரா பண்ட்கள் ஒரு சுழற்சியில் மிக அதிக வருமானத்தை கொடுக்கும். மற்றொரு சமயத்தில் எதிர்மறை வருமானத்தை கொடுக்கும் என்பதால் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கடந்த ஆண்டு அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட பங்கு பேடிஎம். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு முதலீட்டாளர்களுக்கு லாபம் கொடுக்கவில்லை. லாபம் கொடுக்கவில்லை என்பது மட்டுமல்லாமல் ஒதுக்கப்பட்ட விலையை விட சுமார் 50 சதவீதம் அளவுக்கு சரிந்தே இந்த பங்கின் வர்த்தகம் இருக்கிறது.

ஒரு பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் சந்திக்கும்போது பேடிஎம் என்னவாகும் என்பதுதான் உரையாடலாக இருக்கிறது. இந்த பங்கில் முதலீடு செய்வதர்கள் கூட அமைதியாக இருக்கிறார். ஆனால் முதலீடு செய்யாமல் இருந்த முதலீட்டாளர்கள் தற்போது பரபரப்பாக விவாதித்து வருகிறார்கள்.

ஐபிஓ விலையை விட பாதி விலைக்கு இந்த பங்கு கிடைக்கிறதே. தற்போது வாங்கலாமா? எப்படியும் ஐபிஓ விலைக்கு வருமே என யோசிக்கிறார்கள். பேடிஎம் பங்கு ஐபிஓ விலைக்கு வரும் என்றோ வராது என்றோ கணிப்பு கூறும் கட்டுரை அல்ல இது. இந்த சிந்தனைக்கு கான்ட்ரா investing என்று பங்குச்சந்தை வல்லுநர்கள் அழைப்பார்கள்.

image

அது என்ன கான்ட்ரா?

நல்ல பின்புலம் இருக்கும் பங்கு அசாதாரண காரணங்களால் சரிவை சந்தித்திருக்கும். மேலும் சிறப்பான எதிர்காலம் இருக்கும் பங்கு நீண்ட காலமாக எதாவது ஒரு காரணத்தால் உயராமல் இருக்கும். இதுபோன்ற பங்குகளில் முதலீடு செய்வது மதிப்புமிக்கதாக தெரியும். ஆனால் அந்த பங்கில் சரிவு நிலை இருக்கும். சந்தையில் எதிர்மறை செண்டிமெண்ட் இருக்கும் பங்குகளை தேர்ந்தெடுத்து வாங்குவதுதான் கான்ட்ரா முதலீடு. அதாவது இதற்கு கீழ் இந்த பங்கு சரிவதற்கு வாய்ப்பு இல்லை என்னும் சூழல் நிலவும்போது முதலீடு செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்னும் எண்ணம்தான் கான்ட்ரா முதலீடு.

தற்போது பேடிஎம் பங்குகளில் கவனம் செலுத்திவரும் முதலீட்டாளர்கள் செய்வது இதைதான். மிகப்பெரிய சரிவை சந்தித்த பங்கு மேலே உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதுபோல, அதைவிட மோசமான செய்தி வெளியாகி மேலும் சரிவை சந்திக்கலாம். இதைவிட இதே நிலையில் மேலும் சில ஆண்டுகள் கூட வர்த்தகமாகலாம் என அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன என்பதை முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்வது நல்லது.

இதுபோன்ற பங்குகளில் சரியான நேரத்தில் முதலீடு செய்வது அவசியம். அதைவிட முக்கியம் நீண்ட காலம் பொறுமையாக காத்திருப்பது. வழக்கமாக காத்திருக்கும் காலத்தை விட அதிக காலம் காத்திருக்க வேண்டும்.

image

கான்ட்ரா பண்ட்கள்

பல மியூச்சுவல் பண்ட்கள் கான்ட்ரா பண்ட்களை அறிமுகம் செய்திருக்கின்றன. பல பண்ட்கள் நல்ல லாபத்தையும் கொடுத்திருக்கின்றன. ஆனால் நிதி ஆலோசகர்களின் கருத்துபடி, ஒருவரின் பண்ட் தேர்வில் இறுதி வாய்ப்பாகவே இதுபோன்ற கான்ட்ரா பண்ட்கள் இருக்க வேண்டும் என்பதையே பரிந்துரை செய்வார்கள்.

பங்குச்சந்தை சார்ந்த பண்ட்களில் ரிஸ்க் இருக்கிறது. ஆனால் கான்ட்ரா பண்ட்களில் மற்ற பண்ட்களை விட அதிக ரிஸ்க் இருக்கிறது என்பதால் அனுபவம் மிக்க முதலீட்டாளர்கள் மட்டுமே இதுபோன்ற பண்ட்களில் முதலீடு செய்ய வேண்டும். அதுவும் போர்ட்ஃபோலியோவில் மிகவும் குறைவான சதவீதம் மட்டுமே இதுபோன்ற கான்ட்ரா பண்ட்கள் இருக்க வேண்டும் என ஆலோசனை சொல்லுவார்கள்.

இந்த பண்ட்கள் ஒரு சுழற்சியில் மிக அதிக வருமானத்தை கொடுக்கும். மற்றொரு சமயத்தில் எதிர்மறை வருமானத்தை கொடுக்கும் என்பதால் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதுதவிர இதுபோன்ற தீம்களில் எப்போது முதலீடு செய்கிறோம் என்பதைவிட, எப்போது வெளியேறுகிறோம் என்பதே முக்கியம்.

கிட்டத்தட்ட பேடிஎம் பங்கில் முதலீடு செய்வது என்பதும் கான்ட்ரா முதலீடுதான். முதலீடு வேண்டாம் என்பதே பல புரோக்கிங் நிறுவனங்கள் மற்றும் சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இருந்தாலும் ரிஸ்க் எடுக்க நினைக்கும் முதலீட்டாளர்களை தடுக்க முடியாது. ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்கள் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யலாம். அதுவும் போர்ட்ஃபோலியோவில் மிக குறைந்த அளவு மட்டுமே.

முந்தைய அத்தியாயம்: பணம் பண்ண ப்ளான் B -17: வேலையிலிருந்து சீக்கிரம் ஓய்வுபெற எண்ணுவது சரியா? தவறா?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்