Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

உக்ரைனின் முக்கியமான அணு உலையை கைப்பற்றியது ரஷ்யா: விளைவுகள் எப்படி இருக்கும்?

உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரை தொடங்கியிருக்கும் ரஷ்ய படைகள், தலைநகர் கீவ் நோக்கி முன்னேறி வருகின்றன. குறிப்பாக உக்ரைனில் இருக்கும் செர்னோபில் அணு உலையை ரஷ்ய படைகள் பிடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் போர் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே 80-க்கும் மேற்பட்ட ராணுவ தளங்களை தாக்கி அழித்ததாக ரஷ்ய ராணுவம் தெரிவித்திருக்கிறது. உக்ரைன் எல்லைக்குள் வான், கடல், சாலை என மூன்று வழியாகவும் நுழைந்த ரஷ்ய படைகள் கண் இமைக்கும் நேரத்திற்குள் தாக்குதலை நடத்த ஆரம்பித்தன. இந்த தாக்குதலின் போது, 11 விமான தளங்கள் உள்பட 80-க்கும் மேற்பட்ட ராணுவ தளங்கள் தாக்கி அழிக்கப்பட்டதாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

போதாகுறைக்கு பெலாரஸ் வழியாகவும் ரஷ்ய விமானப் படைகள் முன்னேறியதில், செர்னோபில் அணு உலை ரஷ்யா வசம் வந்துள்ளது. 36 ஆண்டுகளுக்குப் பின் இந்த அணு உலையில் ஏற்பட்ட வரலாற்று பேரழிவால், அங்கு இன்றைய தேதி வரை அணு கதிர்வீச்சு பரவலாக காணப்படுகிறது. தற்போது ரஷ்யா வசம் இந்த அணு உலை சென்றிருப்பதால், அதன் பாதுகாப்பு கேள்விகுறியாகியிருப்பதாக உக்ரைன் கவலை தெரிவித்துள்ளது. தவிர அணு கழிவுகள், அணு பாதுகாப்பு மையங்களின் நிலைமை பற்றி எந்த தகவலும் தெரியவில்லை என்றும் கூறியுள்ளது. அதே நேரம் ரஷ்ய படைகள் வீசிய ஒரு குண்டு, கதிர்வீச்சு கழிவுகள் மீது விழுந்ததாகவும் இதனால், அப்பகுதியில் கதிர்வீச்சின் தாக்கம் அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

image

அதே நேரம், ரஷ்ய படைகளின் அடுத்த இலக்கு தலைநகர் கீவ் தான் என்றும், செர்னோபில் அணு உலை அமைந்திருக்கும் இடத்தில் இருந்து 130 கிலோ மீட்டர் தூரமே இருப்பதால் ரஷ்ய படைகள் எளிதாக தலைநகரை பிடித்து விடும் என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மூத்த உளவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இதற்கிடையே போரில் இதுவரை பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என 137 பேர் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் சுகாதாரத் துறை அமைச்சர் விக்டர் லயாஷ்கோ தெரிவித்துள்ளார். ரஷ்ய படைகள் குண்டுமழை பொழிந்ததில் 169 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாம்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க நேட்டோ தான் காரணமா? - ஓர் பார்வை

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்