Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ரஷ்யாவிற்கு சவால் விடுத்த எலான் மஸ்க்

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 2 வாரங்களை கடந்து போரிட்டு வரும் சூழலில், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ரஷ்யாவிற்கு சவால் விடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் ரஷ்யாவிற்கு சவால் விடுத்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். “இதன் மூலம் ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புதினுக்கு ஒற்றைப் போருக்கான சவாலை விடுக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார் எலான் மஸ்க். மேலும் அவர் “உக்ரைனின் தலைவிதியை ரஷ்யா ஆபத்தில் ஆழ்த்திவிட்டது” என்றும் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் ரஷ்ய அதிபர் புதினைக் குறிப்பிட்டு “இந்த சண்டைக்கு ஒப்புக்கொள்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பதிவை அவர் ரஷ்ய மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை கலந்து எழுதியுள்ளார்.

ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் உக்ரைன் நாட்டின் தொலைத்தொடர்பு இணைப்பு முழுவதும் சீர்குலைந்ததையடுத்து, எலோன் மஸ்க் உக்ரைனுக்கு இணையதள வசதிகளை வழங்கியிருந்தார். உக்ரைனின் துணைப் பிரதமர் மைக்கலோ ஃபெடோரோவ் உதவி கோரியதை அடுத்து, டெஸ்லாவின் ஸ்டார்லிங்க் இணைய முனையங்கள் போர் பாதித்த பகுதிக்கு அனுப்பப்பட்டு தொலைதொடர்பு சேவையை வழங்கினார் எலான் மஸ்க்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்