Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

``முதற்கட்டமாக 9,000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்”-அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 15 ஆயிரம் அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களில் முதற்கட்டமாக 9,494 ஆசிரியர்கள் நியமிக்கப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 34 அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, 2022 - 23ஆம் கல்வியாண்டில் 7,500 திறன் வகுப்பறைகள் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என தெரிவித்தார்.

image

மேலும் 7 கோடி ரூபாய் செலவில் உலகத் தரத்திலான பள்ளிகள் சென்னையில் அமைக்கப்படும் என்றும், 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் அரசு பள்ளிகளில் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

போலவே சிறப்பாக செயல்படும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 100 பேருக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்படும் என தெரிவித்த அன்பில் மகேஷ், மாணவர்களின் உடல்நலன் காக்க சிறப்பு பயிற்சிகளும், மனநலம் காக்க விழிப்புணர்வு வாரமும் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட 34 அறிவிப்புகளை வெளியிடப்பட்டார்.

இவற்றுடன் `ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 15,000 இடங்கள் நிரப்பப்படும். அவற்றில் முதற்கட்டமாக இந்த ஆண்டு 9,000 பேர் பணிக்கு நியமிக்கப்பட உள்ளனர்’ என தெரிவித்தார்.

சமீபத்திய செய்தி: அதிக மதிப்பீடு கொண்ட நிறுவனங்களின் பட்டியல்.. முதல் 10 இடங்களுக்குள் அதானி கிரீன் எனர்ஜி.. சந்தை மதிப்பு இத்தனை கோடிகளா..!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்