Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

போதைப்பொருளுக்கு எதிராக கவனம் ஈர்க்கும் மீம்ஸ்கள், அனிமேஷன் வீடியோக்கள்!

போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வுக்காக அனிமேஷன் மூலம் வீடியோக்களை உருவாக்கியுள்ளது மாநில போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவல்துறை.

DAD (drive against drug) என்ற பெயரில் போதைப்பொருளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கையை தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் குட்கா பான் மசாலா மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதையும், விற்பனை செய்யப்படுவதையும் தடுத்து பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை பொது மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை துண்டுப் பிரசுரங்களையும் காவல்துறை வழங்கி, விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

image

தற்போது நவீன காலத்திற்கு ஏற்ப போதைப்பொருளால், ஏற்படும் விளைவுகள் குறித்து மீம்ஸ்கள் மூலம் காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. DAD (Drive Against Drugs) என்ற பெயரில் சமூக வலைதள பக்கம் உருவாக்கி அதில் மீம்ஸ்கள் மூலமாக போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அதில் தற்போது மீம்ஸ் மட்டுமன்றி வீடியோக்களும் வெளியிடப்படுகின்றன. டக்கர் பாண்டி டிஜே தேவ் என்ற பெயரில் அனிமேஷன் கதாபாத்திரங்களை உருவாக்கி, அதன் வழியாக போதைப்பொருளுக்கு எதிரான அனிமேஷன் வீடியோக்களை போலீசார் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த டக்கர் பாண்டி கதாபாத்திரம் நடிகர் ரஜினிகாந்தின் சினிமா வசனங்களை பயன்படுத்தி போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு செய்கிறார். பொதுமக்கள் கவரும் வகையில் இந்த அனிமேஷனை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

image

அதேபோல டிஜே ரேவ் என்ற கதாபாத்திரம் நடிகர் அஜித்தின் படம் வலிமை மற்றும் நடிகர் விஜய் படம் மாஸ்டர் இரண்டிலும் போதைப்பொருளுக்கு எதிராக படம் நடித்துள்ளதை சுட்டிக்காட்டி உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம், போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலை குறைக்க முடியும் என்பதால் காவல்துறையினர் இந்த விழிப்புணர்வு நடவடிக்கையில் களமிறங்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய செய்தி: சீரமைக்கப்படும் சமத்துவபுரங்கள்... அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்