Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

வரலாற்று சாதனை படைத்த காது கேளாதோருக்கான ஒலிம்பிக் அணி: தனது இல்லத்தில் சந்தித்து பாராட்டிய பிரதமர்

புதுடெல்லி: உங்களது ஆர்வம், உற்சாகத்தை தொடர்ந்து கடைபிடியுங்கள். அது நாட்டின் முன்னேற்றத்தில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியினரிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பிரதமர் மோடி, அண்மையில் நடந்து முடிந்த காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியினரை, இன்று (சனிக்கிழமை) தனது இல்லத்தில் சந்தித்தார்.பிரேசில் நாட்டில் நடைபெற்ற காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில், இதுவரை இல்லாத வகையில் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியினர், 8 தங்கம் உள்ளிட்ட 16 பதக்கங்களை வென்றுள்ளனர். இந்த சந்திப்பின் போது மத்திய அமைச்சர்கள் அனுராக் சிங் தாக்கூர், நிஷித் பிரமானிக் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்