Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு இன்று பதவியேற்பு

நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு இன்று பதவியேற்கவுள்ளார்.

நாடாளுமன்ற மைய வளாகத்தில் காலை 10.15 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டின் முதல் குடிமகளாக திரெளபதி முர்முவுக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். 21 குண்டுகள் முழங்க பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், நாட்டு மக்களிடையே அவர் உரையாற்றவுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

image

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், மக்களவை எம்.பி.க்கள், முப்படை அதிகாரிகள் ஆகியோர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழா முடிந்ததும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அவர் அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு முப்படைகளின் ராணுவ அணிவகுப்பு மரியாதையை அவர் முறைப்படி ஏற்றுக் கொள்கிறார்.

இதையும் படிக்கலாம்: கனத்த இதயத்துடன்தான் ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக அறிவித்தோம் - பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்