Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

வெறுமனே குடிக்கிறது மட்டும்தான் டீம் அவுட்டிங்கா? - பிரபல செயல் அதிகாரி எழுப்பிய கேள்வி!

IT உள்ளிட்ட பெரு நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு இருக்கும் பொதுவான வேலைகளில் ஒன்றாக Team Outing பார்க்கப்படுகிறது.

அதீத பணிச்சூழல்களிடையே ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை அலுவலக நண்பர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து டீம் அவுட்டிங் செல்லும் முறை நடைமுறையில் இருப்பதுதான்.

ஆனால், அப்படி குழுவாக வெளியே போகிறவர்கள், பார், ரெஸ்டாரண்ட், ரெசாட்டிற்கு சென்று, மது குடித்தும் கொண்டாடுவதையே வழக்கமாக கொண்டிருப்பார்கள்.

இந்த மாதிரியான கொண்டாட்டங்களை தாண்டி வேறு என்ன இருந்திட முடியும் என எண்ணிவிட்டார்களா என தெரியவில்லை என்ற கேள்வியை உணர்த்தும் வகையிலான வைரலான ட்விட்டர் பதிவை பற்றிதான் பார்க்கப்போகிறோம்.

Coins with Kuber என்ற க்ரிப்டோ செயலி நிறுவனத்தின் செயல் அதிகாரி அன்கிட்தான் டீம் அவுட்டிங் குறித்து முக்கியமான கேள்வியை எழுப்பி பதிவிட்டிருக்கிறார்.

அதில், “டீம் அவுட்டிங் என்பது வெறுமனே வெளியே சென்று ஆல்கஹால் குடிப்பது போன்றே குறைக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் வருத்தமாக உள்ளது. இது சலிப்பானது, ஆரோக்கியமற்றது மற்றும் விலை உயர்ந்ததும் கூட.

எப்படி புகைப்பிடிப்பவர்களால் நாம் செயலற்ற முறையில் கொல்லப்படுகிறோமோ அதைவிட மோசமானது இந்த குடிப்பழக்கத்தை சகித்துக்கொள்வது. இதற்கான வெற்றிகரமான மாற்று வழி என்ன?” எனக் கேட்டு பதிவிட்டிருக்கிறார்.

அன்கிட்டின் இந்த ட்வீட்டிற்கு பலரும் பல விதமான ஐடியாக்களை கூறி பதிவிட்டிருக்கிறார்கள். அதில், ட்ரெக்கிங் செய்வது, ஸூம்பா அல்லது டான்ஸ் க்ளாஸ்-க்கு செல்வது, நீண்ட நடைபோடுவது என பலவற்றை கூறியிருக்கிறார்கள்.

மேலும், indore trampoline மற்றும் பசுமையான பகுதிகளுக்கு எங்கள் ஊழியர்களை அழைத்துச் சென்றோம் என சிலரும் பதிவிட்டிருக்கிறார்கள். இதுபோக பலரும் தங்களுடைய கசப்பான, மகிழ்ச்சியான டீம் அவுட்டிங் அனுபவத்தையும் அன்கிட்டின் ட்வீட்டில் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்