Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கேப்டனாக முதல் வெற்றியை பதிவு செய்வாரா கே.எல்.ராகுல்? - ஜிம்பாப்வேயுடன் இன்று முதல் போட்டி

கேப்டனாக கே.எல்.ராகுல் தனது முதல் வெற்றியை பதிவு செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 ஆட்டங்களை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதலாவது ஆட்டம் இன்று பகல் 12.45 மணிக்கு தொடங்குகிறது. நீண்ட இடைவெளிக்கு பின் அணிக்கு திரும்பியுள்ள கே.எல்.ராகுல், இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். இதுவரையில் இந்திய அணியை 1 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தி உள்ளார் அவர். ஆனால் இந்த நான்கு போட்டிகளிலும் இந்தியா தோல்வியையே தழுவியுள்ளது. அதனால் ஜிம்பாப்வே தொடரில் கே.எல்.ராகுல் தலைமையிலான அணி முதல் வெற்றியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரராக கே.எல் ராகுல் இடம் பிடிப்பார் என்பதால் இந்த தொடரானது அவருக்கு முக்கியமான ஒரு தொடராக பார்க்கப்படுகிறது.

image

ஜிம்பாப்வே அணி ரெஜிஸ் சகப்வா தலைமையில் களம் காண்கிறது. சமீபத்தில் வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் வெற்றியை ருசித்த ஜிம்பாப்வே அணி வீரர்கள் அதே உத்வேகத்துடன் இந்த தொடரிலும் வெற்றிக்கனியை பறிக்கும் ஆர்வத்தில் இருக்கிறார்கள்.

இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் இதுவரை மோதிய 63 ஒருநாள் ஆட்டங்களில் 51 ஆட்டங்களில்  இந்தியாவும், 10 ஆட்டங்களில் ஜிம்பாப்வேயும் வென்றுள்ளன. உள்ளூரில் நடந்த  23 ஆட்டங்களில் ஜிம்பாப்வே 4 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களிலும் இந்தியாவே வென்றுள்ளது.

image

இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-

இந்தியா: ஷிகர் தவான், சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், கே.எல்.ராகுல் (கேப்டன்), சஞ்சு சாம்சன் அல்லது இஷான் கிஷன், தீபக் ஹூடா, அக்‌ஷர் பட்டேல், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா அல்லது அவேஷ்கான்.

ஜிம்பாப்வே: தகுட்வனாஷி கைதானோ, டேடிவனாஷி மருமானி, இன்னசென்ட் கையா, வெஸ்லி மாதேவிர், சிகந்தர் ராசா, ரெஜிஸ் சகப்வா (கேப்டன்), ரையான் பர்ல் அல்லது டோனி முனியோங்கா, லூக் ஜாங்வி, பிராட் இவான்ஸ், விக்டர் யாச்சி, தனகா சிவாங்கா.

இதையும் படிக்க: அடுத்த 5 வருடத்திற்கான கிரிக்கெட் தொடர்களின் அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்