Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ட்விட்டரில் 'ப்ளூ டிக்' வசதிக்கு இனி கட்டணம்: எவ்வளவு தெரியுமா?

ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு வழங்கப்படும் 'ப்ளூ டிக்' வசதிக்கு இனி கட்டணம் வசூலிக்க எலான் மஸ்க் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ட்விட்டர் நிறுவனம் உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க்-க்கு கைமாறியுள்ள நிலையில், அவர் ட்விட்டர் தளத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக ட்விட்டரில் அளிக்கப்படும் சில சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

image

ட்விட்டரில் பிரபலங்கள், பெரிய நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு 'ப்ளூ டிக்' வழங்கப்படுகிறது. இந்த ப்ளூ டிக் வசதிக்கு இனி கட்டணம் வசூலிக்க எலான் மஸ்க் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ப்ளூ டிக்' கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் மாதம்தோறும் 4.99 அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் 411) செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை செலுத்தவில்லை என்றால்  'ப்ளூ டிக்' வசதி உள்ளவர்களின் கணக்கில் இருந்து  'ப்ளூ டிக்' நீக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இதனால்  'ப்ளூ டிக்' வைத்துள்ள ட்விட்டர் பயனர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்.

image

உலகம் முழுவதும் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் நிறுவனத்தை உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ரூ.3.61 லட்சம் கோடிக்கு சமீபத்தில் வாங்கினார். இதனையடுத்து ட்விட்டர் தளத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர அவர் முயற்சித்து வருகிறார். எலான் மஸ்க் நேற்று வெளியிட்டிருந்த ட்விட் ஒன்றில் 'ட்விட்டரில் வெளியிடப்படும் பதிவுகளின் நம்பகத்தன்மை மற்றும் தரத்தை கண்காணிக்க புதிதாக 'பதிவுகள் மதிப்பீட்டு குழு' அமைக்கப்படும்' என்றார்.

இதையும் படிக்கலாமே: ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதும் அதிரடி - உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்த எலான் மஸ்க்?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்