Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இம்ரான் கானுடன் மோதல்போக்கை கடைப்பிடித்தவருக்கு ராணுவ தளபதி பதவி - யார் இந்த அஜிம் முனீர்?

பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதியாக  அஜிம் முனீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை அந்நாட்டின் ராணுவத் தளபதி பதவி மிகவும் அதிகாரம் மிக்கதாக பார்க்கப்படுகிறது. இச்சூழலில் பாகிஸ்தான் நாட்டில் கடந்த 6 ஆண்டுகளாக ராணுவத் தளபதியாக பதவி வகித்துவரும் கமர் ஜாவேத் பாஜ்வா (61), வரும் நவம்பர் 29ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், புதிய ராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர், முப்படைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் ஷாகிர் ஷம்ஷத் மிர்சா ஆகியோரை நியமனம் செய்துள்ளார் பிரதமர் ஷெபாஸ் ஷரீப். புதிய ராணுவ தளபதி நியமனத்துக்கு அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி ஒப்புதல் அளித்துள்ளார்.

image

யார் இந்த அஜிம் முனீர்?

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் அஜிம் முனீர். இவருக்கும் அப்போதைய பிரதமா் இம்ரான் கானுக்கும் இடையே மோதல் போக்கு இருந்தது. இதன் காரணமாக பிரதமா் இம்ரான் கானின் வற்புறுத்தலால் குறுகிய காலத்திலேயே அஜிம் முனீர் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டாா். இந்நிலையில்தான் அஜிம் முனீர் பாகிஸ்தான் நாட்டின் ராணுவத் தளபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த 3 ஆண்டுகள் வரை அவர் இந்த பொறுப்பில் செயல்பட உள்ளார். மேலும் இவர் தற்போதைய ராணுவ தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா தலைமையின் கீழ் இந்தியா, சீனா, அமெரிக்கா எல்லையோர ராணுவ பிரிவுகளில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர் ஆவார்.

இதையும் படிக்கலாமே: மின் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்கும் ரஷ்யா! 70 ஏவுகணைகளால் இருளில் மூழ்கிய உக்ரைன்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்