Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

FIFA WC 2022 அலசல் | பிரேசிலின் ரிசார்லிசன் அடித்த ‘மேஜிக்கல்’ கோல் - தோற்றாலும் கெத்து காட்டிய செர்பியா!

கத்தாரில் நடைபெற்று ஃபிஃபா உலகக் கோப்பை 2022-ன் குரூப் ஜி போட்டியில் தைரியமாக ஆடிய செர்பியாவை பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. இதில் பிரேசில் வீரர் ரிசார்லிசன் 2 கோல்களை அடித்தார். இவர் அடித்த இரண்டாவது கோல் அற்புதத்தின் உச்சம். மேஜிக்கல் கோல் என்பார்களே அதுதான் இந்த கோல். இந்த உலகக் கோப்பையின் சிறந்த கோல் என்று இது வர்ணிக்கப்படுகிறது.

ஆட்டம் தொடங்கியது முதல் செர்பியா மிக தைரியமாக ஆடியது. முதல் பாதிவரை பிரேசிலினால் பல முறை செர்பிய கோல் வட்டத்துக்குள் ஊடுருவ முடிந்தாலும் செர்பிய கொல் கீப்பர் வான்யா மிலின்கோவிக் பிரேசிலின் ஸ்ட்ரைக்கிங் ஆற்றலுக்கு கடும் முட்டுக்கட்டைகளைப் போட்டார். முதல் பாதியில் பிரேசில் வீரர்களிடமே பந்து அதிகம் இருந்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்