Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பெண்களின் ஆடை குறித்து இப்படியொரு கமெண்ட்டா! - பாபா ராம்தேவ் பேச்சால் வெடித்த சர்ச்சை!

பெண்கள் புடவையிலும், சல்வார் உடையிலும், எதுவும் அணியாத போதும் அழகாக இருப்பார்கள் என யோகா குரு பாபா ராம்தேவ் கூறியது சர்ச்சையாகி உள்ளது. இந்த கருத்துக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் கண்டனம் தெரிவித்து, ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றுள்ளார்.

பல சர்ச்சைகளில் தொடர்ச்சியாக சிக்கி வந்த யோகா குரு பாபா ராம்தேவ், தற்போது மீண்டும் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். மகாராஷ்டிர தானேவில் பாபா ராம்தேவ் நடத்திய யோகா நிகழ்ச்சியில், துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸ் கலந்துகொண்டார்.

பாபா ராம்தேவ் பேசியது என்ன?

நிகழ்ச்சியில் பேசிய பாபா ராம்தேவ் யோகாவின் நன்மைகள் கூறி பேச தொடங்கி, பெண்கள் புடவை, சல்வார் உடை, எதுவும் அணியாவிட்டாலும் அழகாக இருப்பார்கள் என்று கூறியது சர்ச்சையை தொடங்கி வைத்துள்ளது. இப்படி பேசும் போது மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸ் அருகில் இருந்தது கூடுதல் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ராம்தேவ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மகளிர் ஆணைய தலைவர் கடும் கண்டனம்!

தில்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால், இந்தக் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வீடியோவைப் பகிர்ந்துள்ளார். பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சுவாதி மாலிவால் ட்வீட் செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் எம்பி ஸ்ரீகாந்த் ஷிண்டேவும் கலந்து கொண்டார்.

சிவசேனா (உத்தவ் பிரிவு) கண்டனம்!

சிவசேனா தலைவர் சஞ்சய் ராவுத்தும் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்ததோடு, ஏன் அம்ருதா ஃபட்னாவிஸ் அந்த யோகா நிகழ்ச்சியின் போது பாபா ராம்தேவ்வுக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

image

"சிவாஜியை அவமதிக்கும் வகையில் கவர்னர் கருத்து கூறும்போதும், கர்நாடக முதல்வர் மகாராஷ்டிரா கிராமங்களை கர்நாடகாவுக்கு கொண்டு செல்வதாக மிரட்டும் போதும், தற்போது பாஜக பிரசாரகரான பாபா ராம்தேவ் பெண்களை இழிவுபடுத்தி பேசும் போதும் அரசு மவுனம் காக்கிறது. அரசு டெல்லிக்கு நாக்கை அடகு வைத்து விட்டதா?" சஞ்சய் ராவத் பேசியுள்ளார்.

பாபா ராம்தேவ் கொடுத்த விளக்கம்!

இந்த சர்ச்சைகளை தொடர்ந்து தனது கருத்துக்கு விளக்கம் கொடுத்த குரு பாபா ராம்தேவ், ‘இந்நிகழ்ச்சியில் பல பெண்கள் புடவைகளை கொண்டு வந்ததாகவும், ஆனால் பின் அங்கு தொடர் நிகழ்வுகளால் அவற்றை அணிய நேரம் கிடைக்கவில்லை. இதை பற்றி பேசும் போது தான் "நீங்கள் புடவையில் அழகாக இருப்பீர்கள், அம்ருதா ஜி போன்ற சல்வார் உடையில் அழகாக இருப்பீர்கள், என்னைப் போல எதுவும் அணியாமல் இருக்கும் போது அழகாக இருப்பீர்கள்’ என்றேன்.

இதையும் படியுங்கள் - ”குஜராத் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு நீங்கள் என்ன பாடம் கற்பித்தீர்கள்?” - ஓவைசி கேள்வி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்