Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

போதையில் செல்பவர்களுக்கென பிரத்யே சாலை குறியீடா? எங்கு தெரியுமா? பின்னணி இதோ!

மது போதையில் வாகனம் ஓட்டிச் செல்பவர்களுக்காக பிரத்யேகமான சாலை வழிகள் இருந்தால் எப்படி இருக்கும்? அப்படியான ஒரு குறியீடு லண்டனின் க்ளிவ்டெனில் உள்ள கடற்கரை சாலையில் வரையப்பட்டிருப்பது மக்களிடையே குழப்பத்தையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி க்ளிவ்டெனில் உள்ள அந்த கடற்கரை சாலையின் ஒரு பகுதியில் மட்டும் அலைகளை போன்று வெள்ளை கோடு வரையப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட அந்த சாலையில் பார்க்கிங் வசதிக்கான இடம் போக எஞ்சிய பகுதி டூ வீலர்கள் செல்வதற்காக ஒதுக்கப்பட்டு அதற்கான குறியீடும் வரையப்பட்டிருக்கிறது.

அந்த குறியீட்டின் மற்றொரு முனையை முழுமையாக வரையாமல் இருந்ததால் அது பார்ப்பதற்கு போதையில் தள்ளாடிக் கொண்டே வண்டி ஓட்டுவது போல காணப்பட்டிருக்கிறது. இதனைக் கண்ட அந்த பகுதி மக்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.

ஏனெனில் சாலையில் வரையப்பட்டிருக்கும் குறியீட்டை கொண்டே வாகனங்களை இயக்க வாகன ஓட்டிகளுக்கு ஏதுவாக இருக்கும். ஆனால் க்ளிவ்டெனில் உள்ள கடற்கரை சாலையில் வரையப்பட்டிருக்கும் அந்த குறியீடு வாகன ஓட்டிகளை குழப்பமடையவே செய்யும் என்றும், பார்க்கிங் வசதியை மாற்றியமைத்தால் சிரமமாகவே இருக்கும் என்றும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

110123 Wiggly Lines Clevedon BPM Media

இதுபோக ஒரு கையெழுத்து இயக்கத்தையும் உருவாக்கி ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு அதனை கவுன்சிலிலும் ஒப்படைத்திருக்கிறார்கள். மேலும் seafront பகுதியை மாற்றியமைப்பதாகச் சொல்லி அங்கு செய்யப்பட்டு வரும் வியாபாரத்தை கெடுத்துவிட வேண்டாம் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக மெட்ரோ செய்தியின் படி, அந்த சாலை குறியீடு வேண்டுமென்றே அலைகளை போன்று வரையப்பட்டதா அல்லது பாதியில் நிறுத்தப்பட்டதற்கான குறியீடா என்று சரியாக தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்