Header Ads Widget

Breaking News

IND vs AUS 3-வது டெஸ்ட் | ஆடும் லெவனில் இடம்பெறாத கே.எல்.ராகுல்

இந்தியா - ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனில் கே.எல்.ராகுல் இடம்பெறவில்லை. டெஸ்ட் அணியில் அவரது இடம் குறித்து பலரும் விமர்சனங்களை முன்வைத்த நிலையில் ஆடும் லெவனில் அவர் இடம்பெறவில்லை.

30 வயதான கே.எல்.ராகுல், இந்திய அணிக்காக இதுவரை 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 81 இன்னிங்ஸில் 2,642 ரன்கள் குவித்துள்ளார். இதில் 13 அரைசதம் மற்றும் 7 சதங்கள் அடங்கும். இருந்தபோதும் கடந்த ஓராண்டு காலமாக அவர் சரிவர ஆடுவதில்லை.


கருத்துரையிடுக

0 கருத்துகள்