வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வரும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், தற்போது ட்விட்டரின் அடையாளமான நீல நிற குருவி லோகோவையும் மாற்றியுள்ளார். அதற்கு பதிலாக அவர் நாய் படத்தை பதிவிட்டுள்ளார்.
இருப்பினும், ட்விட்டரின் மொபைல் ஆப் வெர்சனில் உள்ள லோகோவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. லோகோவை மாற்றியதற்கான பின்னணியையும் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதன்படி, டபிள்யூஎஸ்பிசி தலைவர் என்ற பெயரில் ட்விட்டரில் கணக்கு உருவாக்கியுள்ள ஒரு பயனாளர், "ட்விட்டரை வாங்கவும், பறவையின் சின்னத்துக்கு பதில் நாயை வைக்கவும்" என்று தனது பதிவில் தெரிவித்திருந்தார். அவருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலேயே லோகோவை மாற்றியதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்
0 கருத்துகள்