சான் பிரான்சிஸ்கோ: வாட்ஸ்அப் மெசேஞ்சர் சேவையை பயன்படுத்தி வரும் பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் கணக்கை பல போன்களில் பயன்படுத்தும் புதிய அம்சம் அறிமுகமாகி உள்ளது. இந்த புதிய அம்சத்தை பயனர்கள் பயன்படுத்துவது எப்படி என்பதை பார்ப்போம்.
வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
0 கருத்துகள்