Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

IPL 2023 | அகமதாபாத்தில் இன்று மோதல்: குஜராத்தை முதல் முறையாக வீழ்த்தும் முனைப்பில் ராஜஸ்தான்!

அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் மோதுகின்றன.

ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனில் 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகளை பெற்றுள்ளது. எனினும் ரன் ரேட் ( 1.588) அடிப்படையில் ராஜஸ்தான் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. குஜராத் அணியின் ரன் ரேட் 0.341 ஆக உள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்