Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஆஷஸ் 5-வது டெஸ்ட் | ஆஸி.யை வீழ்த்தியது இங்கிலாந்து: கடைசி விக்கெட்டை கைப்பற்றிய ஸ்டூவர்ட் பிராட்

லண்டன்: நடப்பு ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. கடைசி விக்கெட்டை கைப்பற்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றுள்ளார் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்.

லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 283 ரன்கள் மற்றும் ஆஸ்திரேலியா 295 ரன்கள் எடுத்தன. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 395 ரன்கள் குவித்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்