Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் - அல்கராஸ், ஜிவெரேவ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், இத்தாலியின் லோரென்சோ சோனேகோவை எதிர்த்து விளையாடினார். இதில் அல்கராஸ் 6-4, 6-7 (3-7), 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 6-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ் 7-5, 3-6, 4-6, 7-6 (7-5), 7-6 (10-7) என்ற செட் கணக்கில் 4 மணி நேரம் 31 நிமிடங்கள் போராடி சுலோவேக்கியாவின் லுகாஸ் கெலினை வீழ்த்தினார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்