Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

குஜராத்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத்: அகமதாபாத்தில் இன்று பலப்பரீட்சை

அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் 9 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 3 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. அந்த ஆட்டத்தில் 209 ரன்களை குவித்த போதிலும் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி சதத்தால் குஜராத் அணி தோல்வி அடைய நேரிட்டது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்