Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அமீரகத்தில் ‘ஆசிய கோப்பை 2025’ கிரிக்கெட் தொடர்: செப். 14-ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை!

துபாய்: ஆசிய கோப்பை - 2025க்கான தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9 முதல் 28-ம் தேதி வரையில் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் டி20 கிரிக்கெட் பார்மெட்டில் நடைபெறுகிறது. இதில் குரூப் சுற்று, ‘சூப்பர் 4’ சுற்று மற்றும் இறுதிப் போட்டி என ஆட்டங்கள் நடைபெற உள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் அணி நடப்பு சாம்பியனாக பங்கேற்கிறது. கடந்த 2023-ல் இந்திய அணி ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்