
பாரிஸ்: பாரிஸ் நகரில் பாரிஸ் மாஸ்டர்ஸ் ஏடிபி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 31-ம் நிலை வீரரான கிரேட் பிரிட்டனின் கேமரூன் நோரியுடன் மோதினார்.
இதில் அல்கராஸ் 6-4, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 6 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள அல்கராஸ் இந்த தோல்வியால் உலகத் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை இழக்கும் நிலை உருவாகி உள்ளது. ஏனெனில் பாரிஸ் மாஸ்டர்ஸ் தொடரில் இத்தாலியின் ஜன்னிக் சின்னர் கோப்பையை வென்றால் முதலிடத்துக்கு முன்னேறுவார்.

0 கருத்துகள்