Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

"கொல்லைப்புறம் வழியாக புதுச்சேரி ஆட்சியை கைப்பற்ற பாஜக முயற்சி?" - துரைமுருகன்

புதுச்சேரியில் கொல்லைப்புறம் வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சிப்பதா என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

"புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பதவி ஏற்கும் முன்பாக மூன்று நியமன எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமித்திருப்பது கண்டனத்திற்குரியது.

30 எம்எல்ஏக்களை கொண்ட புதுச்சேரி சட்டமன்றத்தில் இந்த 3 நியமன எம்எல்ஏக்கள் மூலம் 33 ஆக உயர்த்தி மக்கள் அளித்த தீர்ப்பை மாசுபடுத்த முனைவது வேதனைக்குரியது.

கொரோனா தொற்று ஏற்பட்டு ரங்கசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அங்கு பேரவைத் தலைவர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. புதிய எம்எல்ஏக்களும் பதவி ஏற்கவில்லை. இந்தச் சூழலில் 3 பேரை நியமித்து பாஜக எம்எல்ஏக்கள் எண்ணிக்கையை 9 ஆக உயர்த்தி இருப்பது எதேச்சதிகாரமானது.

புதிதாக அமைந்திருக்கும் ஆட்சியின் உறுதித்தன்மையை இந்த நியமன எம்எல்ஏக்கள் பலத்தால் சீர்குலைத்து கொல்லைப்புறம் வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக செய்யும் முயற்சி என்று புதுச்சேரி மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்" என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்