Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆம்புலன்ஸ்கள்!

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளுடன் வரும் ஆம்புலன்ஸ்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.

நோயாளிகள் ஆம்புலன்ஸ்களில் காத்திருக்கும் நிலை என்பது ஆக்சிஜன் படுக்கைகள் தட்டுப்பாட்டின் காரணமாகவே ஏற்படுகிறது என்று சொல்லப்படுகிறது. சென்னையில் இரவு நேரங்களில் அவ்வப்போது 10 ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனைகளின் வெளியே காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. ஒரே நேரத்தில் மூச்சுத்திணறலுடன் பல நோயாளிகள் வருவதால் ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாமல் மருத்துவமனை நிர்வாகம் தடுமாறும் சூழல் இருக்கிறது.

இதைத் தவிர்க்க தமிழகம் முழுவதும் ஆக்சிஜன் படுக்கைகளை மேலும் சுமார் 10,000 படுக்கைகளாக உயர்த்துவதும், சென்னையில் மேலும் 5000 படுக்கைகள் உயர்த்துவதும் தேவையாகிறது. புதிய முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மு.க ஸ்டாலின் சுகாராதரத்துறை செயலாளருடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்