Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக அறிக்கை - அதிமுக தலைமையில் விரிசலா?

அதிமுக தலைமைக்குள் அதிகாரப்போட்டி உருவாகியுள்ளதா என்ற கேள்வி அக்கட்சியினர் மத்தியில் எழத் தொடங்கியுள்ளது. முதல்வர் வேட்பாளர் தேர்வில் தொடங்கிய சர்ச்சை, எதிர்க்கட்சி தலைவர் தேர்வு வரை நீடித்த நிலையில் தேர்தல் முடிவிற்கு பின் இது வெளிப்படத் தொடங்கியுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, இரட்டை தலைமை என்ற புதிய அத்தியாயம் அதிமுகவில் தொடங்கியது. இரட்டைக்குழல் துப்பாக்கிபோல இணைந்து செயல்படுவோம் என்று ஓ.பி.எஸ். - இபிஎஸ் இணைந்து அறிக்கை விடுத்திருந்தாலும் அது பெயரளவிலேயே இன்று வரை தொடர்ந்து வருகிறது.

ஆட்சியில் இருந்தவரை, பொது பிரச்சினைகளில் கூட்டறிக்கை மட்டுமே வெளியான நிலையில் கடந்த சில நாட்களாக இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இருவரும் தனித்தனியே அறிக்கை வெளியிடத் தொடங்கிவிட்டனர்.

image

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் இ.பி.எஸ். பிரதமருக்கு தமிழகத்தின் தேவைகள் குறித்து கடிதங்கள் எழுதும் அதேநேரத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் தமிழகத்தில் உள்ள பிரச்னைகளை முதலமைச்சருக்கு சுட்டிக்காட்டி ஓபிஎஸ் நாள்தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

ஓபிஎஸ்- இபிஎஸ் பெயரில் தனித்தனி அறிக்கைகள் வெளியாவது பொதுவெளியில் கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் துரைகருணா.

இப்பிரச்னைகளுக்கு நடுவில் ஓபிஎஸ் - இபிஎஸ் இணைந்து கட்சித்தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தனிநபர் துதிபாடல், தனிநபர் பெயர்களில் பேரவை தொடங்குதல் கூடாது என்றும் தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்