Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கன்னியாகுமரி: மாற்றி கொடுக்கப்பட்ட சடலம்; தோண்டி எடுத்து உறவினர்களிடம் ஒப்படைப்பு

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாயமான சடலம் அதே மருத்துவமனையில் உயிரிழந்த மற்றொருவரின் உறவினர்களால் அடக்கம் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அடக்கம் செய்யப்பட்ட சடலத்தை தோண்டி எடுத்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே குருசடி பகுதியைச் சேர்ந்த 71 வயதான செல்வராஜ் என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 7-ஆம் தேதி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 8-ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் அவரது சடலத்தை பெற்றுக்கொள்ளுமாறு மருத்துவமனை நிர்வாகம் கூறியதை அடுத்து இன்று செல்வராஜின் உறவினர்கள் சடலத்தை பெற்றுக் கொள்வதற்காக சென்றபோது சடலம் மாயமானது தெரியவந்தது.

image

இதனால் மருத்துவமனை ஊழியர்களிடம் செல்வராஜின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து பாதிக்கப்பட்டவரின் சடலம் மாயமான சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக ஆசாரிபள்ளம் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், அதே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த தங்கமணி என்பவரது சடலத்திற்கு பதிலாக செல்வராஜின் சடலத்தை தவறுதலாக வழங்கியதும் அதை அறியாமல் தங்கமணியின் உறவினர்கள் செல்வராஜின் சடலத்தை வாங்கிச் சென்று வட்டம் பகுதியில் உள்ள அந்தோணியார் தேவாலயத்திற்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்ததும் தெரிய வந்தது.

image

பின்னர் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் இவ்விவகாரத்தில் தலையிட்டு தங்கமணியின் உறவினர்களால் அடக்கம் செய்யப்பட்ட செல்வராஜின் சடலத்தை தோண்டி எடுக்க சென்றபோது உறவினர்கள் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர். கடுமையான போராட்டத்துக்கு பின் புதைத்கப்பட்ட இடத்தில் இருந்து உடலை எடுத்து செல்வராஜின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தங்கமணியின் சடலத்தை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் செல்வராஜின் உடல் அடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில் தங்கமணியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது. மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியத்தால் சடலங்கள் தவறுதலாக வழங்கப்பட்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்