Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

விரைவுச் செய்திகள்: ஊரடங்கு நீட்டிப்பு? | +2 மதிப்பெண் முடிவு - உச்ச நீதிமன்றம் உத்தரவு

கொரோனா ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். மருத்துவத் துறை உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் நடக்கவுள்ள ஆலோசனையில் கூடுதல் தளர்வுகள் குறித்து பரிசீலிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம்: இன்று மாலை 6 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது பற்றி ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் வாபஸ்: எட்டுவழிச்சாலைத்திட்டம், நியூட்ரினோ, மீத்தேன் திட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் எனவும், கடந்த ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளும் விலக்கிக் கொள்ளப்படும் எனவும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை மையம்: கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கு சிகிச்சைபெற அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு மையம் திறக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

+2 மதிப்பெண்கள் - ஜூலை 31க்குள் வெளியிட உத்தரவு: பிளஸ் டூ தேர்வுகளை ரத்து செய்த மாநிலங்கள் ஜூலை 31ஆம் தேதிக்குள் மதிப்பெண்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 10 நாட்களுக்குள் மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து தெரிவிக்கவும் ஆணையிட்டுள்ளது.

சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில் சேவை: சென்னையில் நாளைமுதல் மீண்டும் புறநகர் ரயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பெண்கள், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எந்த நேரமும் பயணிக்கலாம், முக்கிய நேரம் தவிர்த்து பிற நேரங்களில் ஆண்கள் பயணிக்கலாம் என கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 54 ஆயிரத்து 69 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

டெல்டா ப்ளஸ் குறித்து அச்சம் தேவையில்லை: டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், தமிழகத்தில் டெல்டா ப்ளஸ் தொற்று கண்டறியப்பட்டவர் நலமடைந்து விட்டதாகவும் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.

தடுப்பூசிக்காக காத்திருந்த மக்கள்: பல்வேறு மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். கன்னியாகுமரி மலை கிராமத்தில் தடுப்பூசிக்காக காலை முதல் மக்கள் காத்திருந்தனர்.

நோயாளி உயிரிழப்பு - ஆக்சிஜன் நிறுத்தம் காரணமில்லை: நாகை அரசு மருத்துவமனையில் நோயாளி உயிரிழந்ததற்கு ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதே காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கொரோனா தீவிரத்தால்தான் உயிரிழந்தததாக மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வெப்பச் சலனம் காரணமாக சேலம், தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும் என கட்சி பொதுசெயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

காஷ்மீர் தலைவர்களை சந்திக்கிறார் பிரதமர்: காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்களை பிரதமர் மோடி இன்று சந்திக்கிறார். தேர்தல் நடத்துவது, மீண்டும் மாநில அந்தஸ்து தருவது குறித்து பேசப்படலாம் எனக் கூறப்படுகிறது.

தடுப்பூசி செலுத்தும் வேகம் போதாது-சோனியா காந்தி: இந்தியாவில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேகம் போதாது என கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமர்சனம் செய்தார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - நியூசிலாந்துக்கு பட்டம்: உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன் ஷிப் போட்டியில் மகுடம் சூடியது நியூசிலாந்து அணி. இறுதிப்போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றிபெற்றது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்