Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

விரைவுச் செய்திகள்: மோடி - ஸ்டாலின் சந்திப்பு | மின்கட்டண அவகாசம் | இங்கிலாந்தில் ஊரடங்கு

பிரதமர் நரேந்திர மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் சந்திப்பது உறுதியானது. 18ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்திக்கிறார் ஸ்டாலின்.

ரூ.2000, 14 மளிகைப் பொருட்கள் விநியோகம்: கொரோனா நிவாரணத் தொகையின் 2 ஆவது தவணையாக 2000 ரூபாய் வழங்கும் பணி தொடங்கியது. 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பும் விநியோகிக்கப்படுகிறது.

முக்கொம்பு வந்தடைந்தது காவிரி நீர்: மேட்டூரிலிருந்து 10,000 கன அடி நீர் முக்கொம்பு வருகிறது. நெல்மணிகள், மலர் தூவி காவிரி தாயை விவசாயிகள் வரவேற்றனர்.

ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை: கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். முதல்முறையாக ஆட்சியராக நியமிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்டோர் நேரில் பங்கேற்றனர்.

மேலும் 1.19 லட்சம் தடுப்பூசிகள் வருகை: கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள நாளுக்குநாள் பொதுமக்களிடையே ஆர்வம் அதிகரித்துவருகிறது. தற்போது தமிழ்நாட்டிற்கு மேலும் 1.19 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது.

மீன்கள் விலை உயரும் சூழல்: மீன்பிடித் தடைக்காலம் முடிந்ததை அடுத்து மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். டீசல் விலை உயர்வால் மீன்களின் விலை உயரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு: நெடுவாசலில் எரிவாயு எடுக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. திட்டத்தை கைவிடக்கோரி விவசாய சங்கத்தினர், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

'லுக் அவுட்' நோட்டீஸ் பிறப்பிக்க முடிவு: பாலியல் புகாரில் சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடத்த தமிழ்நாடு போலீஸ் உத்தராகண்ட் விரைந்தது. வெளிநாடு தப்பிச்செல்வதை தடுக்க லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடவும் திட்டமிட்டுள்ளது.

மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்படுமா?: மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவுபெறுகிறது. நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

தினசரி பாதிப்பு 60 ஆயிரமாக குறைந்தது: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 60ஆயிரமாக குறைந்தது. 24 மணிநேரத்தில் ஒரு லட்சத்து 17ஆயிரம் பேர் குணமடைந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இணையதளத்தில் கோயில் வரவு, செலவு கணக்குகள்?: கோயில் வரவு, செலவு கணக்குகளையும் மக்கள் அறியும் வகையில் இணையதளத்தில் வெளியிட தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

தலைமறைவான 'பப்ஜி' மதன் சவால்: தன்னை கைதுசெய்ய முயற்சிப்பது நடக்காது என தலைமறைவான 'பப்ஜி' மதன் காவல்துறைக்கு சவால் விடுத்துள்ளார். VPN மூலம் இணையத்தை பயன்படுத்துவதால் இருப்பிடத்தை கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மதுபோதையில் அட்டூழியம் - போலீஸ் ஜீப் சேதம்: சென்னை அம்பத்தூரில் மதுபோதையில் போலீஸ் ஜீப் உள்ளிட்ட வாகனங்களை சேதப்படுத்திவிட்டு தலைமறைவான 6 பேரை தேடிப்பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்தியாவில் தயாராகும் 'நோவாவேக்ஸ்' தடுப்பூசி: அமெரிக்காவின் நோவாவேக்ஸ் தடுப்பூசியை சீரம் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கிறது. ஆகஸ்டு மற்றும் டிசம்பருக்கு இடைப்பட்ட காலத்தில் 20 கோடி தடுப்பூசி உற்பத்திக்கு இலக்கு வைத்துள்ளது.

இங்கிலாந்தில் ஊரடங்கு நீட்டிப்பு: இங்கிலாந்தில் ஊரடங்கை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டார். டெல்டா வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவும் நிலையில் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

ஸ்பெயின்-ஸ்வீடன் ஆட்டம் சமன்: யூரோ கோப்பை கால்பந்தில் போலந்து அணியை ஸ்லோவாக்கியா வீழ்த்தியது. ஸ்பெயின்-ஸ்வீடன் அணிகளுக்கு இடையிலான‌‌‌ போட்டி கோலின்றி சமன் செய்யப்பட்டது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்