Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இஸ்லாமியர்களுக்காக மசூதி கட்டித்தரும் மற்ற மதத்தினர்... இது பஞ்சாப் நெகிழ்ச்சி!

பஞ்சாப்பில் சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக கிராமத்தில் மசூதி கட்ட உதவி செய்துள்ளனர் மற்ற மதத்தைச் சேர்த்த மக்கள். இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சம்பவம் நிகழ்ந்தது மோகாவில் உள்ள பூலார் என்ற கிராமத்தில் தான். இந்த கிராமத்தில் ஏழு குருத்வாராக்கள் மற்றும் இரண்டு கோயில்கள் உள்ளன. ஆனால் மசூதி இல்லை. இந்த நிலையில் தான் மசூதி கட்ட முடிவு செய்துள்ளனர். இந்த முடிவு எடுக்க காரணம் அந்தக் கிராமத்தில் வசிக்கும் நான்கு இஸ்லாமிய குடும்பம் தான். 1947 பிரிவினைக்கு முன்பு இந்தக் கிராமத்தில் மசூதி இருந்துள்ளது. ஆனால் அது காலப்போக்கில் சிதைந்துவிட, இஸ்லாமியர்கள் அவதிப்பட்டுள்ளனர்.

image

இதையடுத்து அவர்கள் கிராமத்தில் இருந்து வெளியேற இருந்த நிலையில் தான் மக்கள் ஒன்றுகூடி மசூதி கட்டித்தருவது என்ற முடிவை எடுத்துள்ளனர். மசூதி கட்டுவதற்காக ரூ.100 முதல் ரூ 1 லட்சம் வரை அனைத்து கிராம மக்களும் பங்களிப்பு செய்து ஒத்துழைத்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மசூதி அடிக்கல் நாட்டு விழா நடத்த இருந்த நிலையில் அங்கு பெய்த பலத்த மழை காரணமாக விழா தடைபட்டுள்ளது.

பின்னர் கிராமவாசிகள் விழா நடைபெறும் இடத்தை அருகிலுள்ள குருத்வாராவுக்கு மாற்ற வேண்டும் என்று மாற்றி, விழாவிற்கு வந்தவர்களுக்கு குருத்வாராவில் வைத்து லங்கர் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். சீக்கிய மற்றும் இந்து சமூகத்தைச் சேர்ந்த கிராமவாசிகள் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளனர். லங்கர் முடித்த பின், மசூதி காட்டும் திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க அனைவரும் குருத்வாராவில் பிரார்த்தனை செய்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பேசிய அந்த கிராமத்தைச் சேர்ந்த சர்பஞ்ச் பாலா சிங் என்பவர், "1947-ல் பிரிவினைக்கு முன்னர் இங்கு ஒரு மசூதி இருந்தது. ஆனால் அது காலப்போக்கில் இடிந்து விழுந்தது. இதனால் இங்குள்ள நான்கு இஸ்லாமிய குடும்பங்கள் வெளியேற நினைத்திருந்தனர். எங்கள் கிராமத்தில் இணக்கமாக வாழும் இந்து, முஸ்லீம் மற்றும் சீக்கிய குடும்பங்கள் மத்தியில் இது தாக்கத்தை ஏற்படுத்தியது. எவ்வாறாயினும், இஸ்லாமிய குடும்பங்களுக்கும் வழிபாட்டுத் தலம் இருக்க வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்பினோம். அதன்படி, மசூதி முன்பு இருந்த நிலத்தில் மீண்டும் கட்டப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

image

ஞாயிற்றுக்கிழமை, மசூதிக்கு அடிக்கல் நாட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டபோது, பலத்த மழை பெய்யத் தொடங்கியது. பலத்த மழை காரணமாக இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டபோது மக்கள் வருத்தமும் ஏமாற்றமும் அடைந்தனர், ஆனால் அனைத்து கிராம மக்களும் அந்த இடம் அருகிலுள்ள ஸ்ரீ சத்சங் சாஹிப் குருத்வாராவுக்கு மாற்றப்படும் என்று முடிவு செய்தனர். குருத்வாரா எப்போதும் எல்லா சமூகங்களுக்கும் திறந்திருக்கும். பின்னர் அனைவரும் ஒன்று கூடி எல்லாவற்றையும் சில மணி நேரங்களுக்குள் ஏற்பாடு செய்தனர். இந்த நிகழ்ச்சி நடைபெற்றபோது அனைத்து கிராம மக்களும் தங்கள் மதத்தைப் பொருட்படுத்தாமல் பங்கேற்றனர். இந்த மசூதி எங்கள் கிராமத்தின் பத்தாவது வழிபாட்டுத் தலமாக இருக்கும் என்பதில் மிகவும் மகிழ்ச்சி" என்று நெகிழ்ந்து போய் பேசியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்