பாளையங்கோட்டை சிறையில் உயிரிழந்த முத்து மனோ குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முத்துமனோவின் இறப்புக்கு காரணமான பாளையங்கோட்டை சிறைப்பணியாளர்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் விசாரணை முடிவின் அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். முத்து மனோ குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாளையங்கோட்டையில் சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த ஏப்ரல் 22 ம் தேதி முத்து மனோ என்ற சிறைக் கைதி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் மற்றும் சம்பவப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி முத்துமனோவின் உறவினர்கள் தொடர்ந்து அவரின் உடலை வாங்காமல் 70 நாட்களாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதுகுறித்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள், ஜூலை 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்குள் முத்து மனோவின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் 7 மணிக்குள் இறுதி சடங்கு நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்ட பின்பு மனுதாரரின் கோரிக்கை குறித்து நீதிமன்றம் பரிசீலனை செய்யும் என உத்தரவிட்டனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்