Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சபரிமலை ஐயப்பன் கோயில்: இன்று முதல் 21 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி

ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நேற்று மாலை நடை திறக்கப்பட்டு, இன்று முதல் தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆலய தந்திரி கண்டரு ராஜூவரு முன்னிலையில் ஆலய மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையைத் திறந்து வைத்து தீபத்தை ஏற்றி வைத்தார். இருப்பினும், பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு இன்று முதல் 21ஆம் தேதி வரை தினசரி 5000 பேர் வரை தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என்று சபரிமலை ஐயப்பன் கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.

image

மூன்று மாதங்களுக்குப் பின்னர் இன்று முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சபரிமலை கோயிலுக்குச் செல்ல விரும்பும் மக்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அல்லது 48 மணி நேரத்திற்குள் வழங்கப்பட்ட நெகட்டிவ் ஆர்டி-பி.சி.ஆர் அறிக்கையை வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்