உப்பூர் அனல்மின் நிலைய தடை நீக்கம்: ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அனல்மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியது. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த தடையை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
ஒன்றிய அரசு என அழைக்கலாம்: மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறுவதற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு தெரிவித்திருக்கிறது. முதல்வரும் அமைச்சர்களும் இவ்வாறுதான் பேச வேண்டும் என உத்தரவிட முடியாது என விளக்கமளித்திருக்கிறது.
கொரோனா நோய் தடுப்பு மையம் திறப்பு: சென்னை கிண்டி கிங் மருத்துவமனையில் கொரோனாவுக்கு பிந்தைய நோய் தடுப்பு மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள், நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கும் விருது வழங்கினார்.
சென்னையில் வெற்றிபெற உழையுங்கள் -இபிஎஸ்: சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னையில் வெற்றி பெறாததால் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் அறிவுறுத்தி இருக்கிறார்.
குழந்தைகள் விற்பனை - 2 இடைத்தரகர்கள் கைது: மதுரை தனியார் காப்பகத்தில் 2 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் 2 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டனர். குழந்தைகளை விலைக்கு வாங்கிய 2 தம்பதிகள், காப்பக நிர்வாகி என 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.
எம்.ஃபில் படிப்பை தொடர முடிவு: சென்னை பல்கலைக்கழகம் உட்பட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எம்.ஃபில் படிப்பை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
விதிகளை மீறினால் தப்ப முடியாது: சென்னையில் சிக்னலில் விதிகளை மீறுவோர் இனி தப்ப முடியாது. வாகன ஓட்டிகளுக்கு தானியங்கி முறையில் அபராதம் விதிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு: வீடுகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 3 மாதங்களுக்குப் பிறகு உயர்ந்துள்ளது. தற்போது 825 ரூபாயில் இருந்து 850 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்