பாரத ஸ்டேட் வங்கியில் அடிப்படை சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு மாதத்திற்கு 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்பட உள்ளது. இந்த விதி இன்று அமலுக்கு வருகிறது.
பாரத ஸ்டேட் வங்கி கிளையிலிருந்தோ அல்லது ஏடிஎம்மிலிருந்தோ ஒரு மாதத்திற்கு 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கூடுதலான ஒவ்வொரு முறைக்கும் தலா 15 ரூபாய் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல காசோலைகளில் 10 தாள்கள் வரை மட்டும் இலவசமாக பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்றும் இதற்கு மேல் 10 காசோலை தாள்கள் கொண்ட புத்தகத்திற்கு 40 ரூபாயும் 25 தாள்கள் கொண்ட புத்தகத்திற்கு 75 ரூபாயும் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தொகையுடன் தனியாக ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு மட்டும் காசேலை புத்தக கட்டணம் கிடையாது என்றும் எஸ்பிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்