Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பப்ஜி மதனுக்கு ஜாமீனா?- மனு மீது இன்று விசாரணை

ஆபாசமாக பேசி யூ-டியூப்பில் வீடியோ வெளியிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

பப்ஜி விளையாட்டு மூலம் பிரபலமானவர் யூ-டியூப்பர் மதன் என்ற மதன்குமார். இவர் மீது சென்னை புளியந்தோப்பு சைபர் கிரைம் காவல்துறையில் பலர் புகார் அளித்துள்ளனர். அதில் பப்ஜி விளையாட்டு மூலம் சிறுவர், சிறுமிகளுடன் ஆபாசமாக பேசி லட்சக்கணக்கில் பணம் பறித்து உள்ளார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த கிரைம் பிரிவு போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில், தலைமறைவாக இருந்த பப்ஜி மதனை தருமபுரியில் காவல்துறையினர் ஜூன் 18 ஆம் தேதி கைது செய்தனர். இதனையடுத்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரார்படுத்தி சிறையில் அடைத்தனர்.

image

இந்த வழக்கில் ஜாமீன்கோரி மதன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சைதாபேட்டை நீதிமன்றம் ஜூன் 28ஆம் தேதி உத்தரவிட்டது. இதனையடுத்து ஜாமீன் கோரி மதன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உண்மையில்லை. எனவே இந்த வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (ஜூலை 1) முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் முன் விசாரணைக்கு வரவுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்