தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் 3 வகைகளாகப் பிரிக்கப்பட்டு, தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில், குறைவான தளர்வுகளே உள்ளன. தற்போது அமலில் உள்ள பொதுமுடக்க கட்டுப்பாடுகள் வரும் 5 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் பொதுமுடக்கம் நீட்டிப்பு, கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து, மருத்துவத் துறை அமைச்சர் மற்றும் முக்கிய துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்துகிறார். 11 மாவட்டங்களில் தொற்றின் வேகம் குறைந்து வரும் நிலையில், 11 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி, நகைக்கடைகள் மற்றும் துணிக்கடைகள் திறப்பு, கோயில்கள் திறக்க அனுமதி உள்ளிட்ட தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்