Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சென்னை ஐஐடி வளாகத்தில் அதிர்ச்சி: இஸ்ரோ விஞ்ஞானி மகன் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

இஸ்ரோ விஞ்ஞானியின் மகனுடைய உடல் சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
 
சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில், இறந்து கிடந்தவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த உன்னி கிருஷ்ணன் என்பவர் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் இஸ்ரோவில் பணிபுரியும் ரகு என்பவரின் மகன் என்பதும், வேளச்சேரியில் தங்கி ஐஐடி மாணவர்களுக்கு புராஜெக்ட் வேலைகளை செய்து கொடுத்து வந்ததும் தெரியவந்தது.
 
இதையடுத்து அவரின் அறைக்குச் சென்ற அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில், "நான் என்ன செய்கிறேன் என்பதே எனக்கே தெரியவில்லை. மிகுந்த மன அழுத்ததில் இருக்கிறேன். என் மரணத்திற்கு யாரும் காரணமில்லை" என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த தற்கொலை கடிதம் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
கேரளாவில் பிடெக் பட்டம் பெற்ற உன்னிகிருஷ்ணன், ஐஐடி மாணவர்களுக்கு புராஜெக்ட் அசோசியேட்டாக இருந்துள்ளதாக தெரிகிறது. சிறிய தண்ணீர் கேனில் பெட்ரோலை எடுத்துச் சென்ற உன்னி கிருஷ்ணன், தீயிட்டு கொளுத்தி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதற்கான தடயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர், அவருடன் தங்கியிருந்த நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்