Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பெட்ரோல் விலை உயர்வால் சைக்கிள் வாங்க ஆர்வம் - விலை அதிகரிக்க வாய்ப்பு?

பெட்ரோல் விலை உயர்வு, கொரோனா கால நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சைக்கிளின் தேவை தற்போது அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் சைக்கிள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா பரவலில் இருந்து இன்னும் தமிழகம் மீளவில்லை. இதை சமாளிப்பதற்குள் சாமானிய, நடுத்தர மக்கள் மீது பெட்ரோல் விலை உயர்வு இன்னும் சுமையை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை கடந்திருப்பதால், இருசக்கரவாகனங்களில் பெட்ரோல் போட்டுச் செல்வதே தற்போதைய சூழலில் சவால் நிறைந்ததாக உள்ளது. இதனால், சென்னையில் சைக்கிள் வாங்க ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் கொரோனா காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருவதால், அதற்காகவும் சைக்கிளை வாங்கிச் செல்கின்றனர்.

சாதாரண சைக்கிள் உட்பட டிஸ்க், கியர் வைத்த சைக்கிள் என பல ரகத்திலான சைக்கிள்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. 6 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை சைக்கிள் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இரும்புப் பட்டைகள் விலை உயர்வால், சைக்கிள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவிலேயே தற்போது சைக்கிள் உற்பத்தி குறைவாகவே உள்ளது. ஆனால் சைக்கிளின் தேவை தற்போது அதிகரித்துள்ளதால், வருங்காலங்களில் சைக்கிளின் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்