Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்: பட்ஜெட்டில் நிதியமைச்சர் விளக்கம்

குடும்பத் தலைவர் என்பது பெண்ணாக இருந்தால் மட்டுமே உதவித்தொகை என்பது தவறான புரிதல் என விளக்கமளித்துள்ளார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
 
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில், பொது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில் துறைவாரியான நிதி ஒதுக்கீடு என பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
 
இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் குறித்துப் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ''குடும்பத்தலைவர் என்பது பெண்ணாக இருந்தால் மட்டுமே உதவித்தொகை என்பது தவறான புரிதல். உதவித்தொகை இல்லத்தரசிகளுக்கானது என்பதால் குடும்பத்தலைவர் பெயரை மாற்றத் தேவையில்லை. இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் தகுதியான குடும்பங்களை கண்டறிந்து அமல்படுத்தப்படும்.
 
அரசு ஊழியர்களுக்கான பேறுகால விடுப்பு 12 மாதங்களாக அதிகரிக்கப்படுகிறது. ஜூலை 1, 2021 முதல் முன் தேதியிட்டு இந்நடைமுறை அமலாகும்'' என அறிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்